வலைப்பதிவில் தேட...

Monday, May 19, 2014

லண்டன் ஒரு சமூகப்போராளியின் பார்வையில்

அன்புத்தோழரே!.

வணக்கம்.

"லண்டன் ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம்" தோழர் மு சங்கையாவின் பயணப்பதிவுப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். தலைப்பாக மேலே குறிப்பிட்டதைப்போல இட்டிருக்கலாம். 
முதலாளித்துவம் அதற்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்றார் மார்க்ஸ். லண்டனின் தோழர் மார்க்ஸின்  இடுகாட்டு நுழைவுக்கட்டணம் மிகக்குறைவானது அது  ஒரு பவுண்டுமட்டுமே. 






மற்ற படி தோழர் சங்கையா குறிப்பிட்டது போல அவர் சென்ற அனைத்து இடங்களிலும் அது 20 பவுண்டுக்குக்குறைவில்லை...லண்டன் டவர், மெழுகுச்சிலை அருங்காட்சியகம் என...லண்டர் டவர் அரண்மனையை மரணத்தின் ஓலங்கள் எனச்சித்தரித்திருக்கிறார். அதை நம்ம ஊரு நாயக்கர் மகாலின் கொடுமையை இணைத்திருக்கிறார். ஆம். அப்போது மதுரை வீரன் போர்ப்படைத்த் தளபதி. அவனது மக்கள் அருந்ததியர் கொத்துக்கொத்தாக அந்த வானத்தில்(குழியில்தான்) கொன்று குவிக்கப்பட்டு அதன் மேல் பூதாகரமான தூண்களை எழுப்பியிருக்கிறார்கள். எதிர்த்து கேட்டான் என்பதற்கான களப்பலியாக மாறு கால் மாறு கை வெட்டப்பட்டு பலியாக்கப்பட்டான்...

மற்றபடிஉல்கமயமாதல் அதன் நீட்சியான வால்மார்ட் டெஸ்கோ பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். இந்தியாவில் கால் ஊன்றப்போவதாக ஒரு தகவல் இருக்கிறது. டாடா இதில் இணையலாம் டொகொமொவுடன் இணைந்ததைப்போல...

ஒலிம்பிக். பாதாள ரயில் அயில் ஆஃப் ஒயிட்  பழத்தோட்டம், ஸ்டோன் ஹெஞ்ச், பாத், அருங்காட்சியகம் என மிகப்பெரிய பட்டியல் அவர் சுற்றிப்பார்த்திருக்கிறார். நமக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு. 

பண்பாட்டு தளம் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். பிரிட்டனில் மணமாகாமல் ஐந்து வருடங்களாக சேர்ந்து வாழுகிறார்கள் இரண்டு குழந்தைகள் இருக்கிறது அவர்களுக்கு என்பது ஒரு பதிவாக இருக்கிறது. எனக்கு நினைவிலிருந்து பல்கேரியா சென்று வந்த (1984) ஒரு சயின்டிஸ்ட், காரைக்குடிக்கு வந்தார் அவருக்கு மொழி பெயர்ப்பாளராக ஒரு பெண் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு மணமாகிவிட்டதா என்று கேட்டார் நமது நண்பர். அந்தப்பெண்மணி ஆகி விட்டது என்றார். எத்தனை குழந்தைகள் என்றார் இவர் . அவர் பதில் அளித்தார் ஒன்று... அடுத்த குழந்தை ....? இவர்... பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஆனால் யாரோடு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.




பெர்னாட்ஷாவோடு ஒரு நடிகை கேட்ட கதைதான் அது. நான் அழகாக இருக்கிறேன் நீ அறிவானவனாக இருக்கிறாய் நாம் இருவரும் மணம் முடித்தால் நமக்குப்பிறக்கும் குழந்தை என்னைப்போல அழகும் உன்னைப்போல அறிவுமாகப்பிறக்கும் என்றாள். அவர் திருப்பிக்கேட்டார். என்னைப்போல அழகும் உன்னைப்போல அறிவும் கூடிய குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது? என்று...

இதயம் பேசுகிறது மணியன் சீனப்பயணக்கட்டுரை எழுதினார் என்னுடைய கல்லூரி காலங்களில்.சீனா ஒரு கம்யூனிச நாடு, இவர் முதலாளித்துவ சிந்தனைஉடையவர். அங்கே தங்குமிடத்தில் கத்வு இருந்தது பூட்டு இல்லை. ஏன் என்று கேட்டார். இந்த தேசத்தின் நடைமுறை என்றார்கள்... டாக்சியில் பயணம் செய்தார். பையை வேண்டுமென்றே விட்டு விட்டு ரூமுக்கு வந்து விடுவார். அதைப்பார்க்காமல் டாக்சி ஓட்டு நர் சென்று விடுவார். தனது இருப்பிடம் சென்று, பை ஒன்று பார்த்துவிட்டு, மீண்டும் இவரது இருப்பிடத்துக்கு வந்து பையைக்கொடுப்பார்.இவர் ரூபாய் வேண்டுமா என்பார். அதற்கு அந்த டிரைவர், என்னுடை பிழை.வேண்டாம், என்பார். அப்புறம் இவர் இட்லி தோசை தேடிப்பிடித்து சாப்பிட்டதை எல்லாம் எழுதி இருப்பார்.





இது போல இல்லை தோழர் சங்கையாவின் பயணக்கட்டுரை.

இருக்கிற கறியிலேயே உயர்ந்த விலை மாட்டுக்கறிதான் லண்டனில் அது பற்றி எழுதவில்லை. அவரது வாழ்க்கைத்துணைவியாரைப்பற்றி எங்கனும் எழுதவில்லை.மகள் மருமகன் பேத்தி என்று இருக்கிறது உலகம். ஒரு நண்பரின் குடும்பம் கூடப்பயணத்திருக்கிறது இருக்கிறார்

பிரிட்டனில் குழந்தை இல்லாத தம்பதியர்கள் 25%. அதை குழந்தை இல்லாத இணையர் என்று குறிப்பிட்டிருக்கலாம்..
வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் அவர்களைத்தொட்டு பாரதி தாசன் வழியாக இயற்கையை ரசித்த "லேக் டிஸ்ட்ரிக்ட்"கவிதை பிடித்திருந்தது...

குழந்தை பற்றிய கவிதையும் பிரமாதம்

காதலை மட்டும் எங்கேயும் சொல்ல வில்லை

பேரன்புடன்,
திலிப் நாராயணன்,
பெல்லாரி.