வலைப்பதிவில் தேட...

Sunday, August 8, 2010

நெஞ்சில் உரமுமின்றி .....

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத்திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி"
பாரதியின் பொன் வரிகள் இது.


அது 1999 மத்தியில் ஆண்டு கொண்டிருந்தது
தேசீய ஜன நாயக முன்னணி (பா. ஜ. க தலைமை)
வழக்கொழிந்து கொண்டிருந்த( இன்றைக்கும் கூட)
சமஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவித்து
ஆயிரம் கோடிரூபாயில் அம்மொழியின்
பெருமை, தொன்மை பற்றிப்பறை சாற்ற
வேண்டிய ஏற்பாடுகள்  நாடு முழுவதும் தூள்
பறந்து கொண்டிருந்தன.


மதுரையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்வு செய்யப்பட்ட மோகன் தனது கன்னிப்பேச்சைத்
தாய்த்தமிழில் துவக்கி முழங்குகிறார்.  அதற்கான
முன்னொப்புதலை முறையாகப்பெற்றுதான்.
1999ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததைப்போல்
2000 ஆவது ஆண்டை தமிழ் மொழியைல் செம்மொழியாக அறிவித்திட
வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உரத்து எழுப்பினார்.


உலகத்தின்தொன்மையான மொழிகள் என்றால்  கிரேக்கம், லததீன்,தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவதான். இயேசு நாதம் போதித்த ஹிப்ரு மொழி கூட இப்போது வழக்கில் இல்லை எனப்படுகிறது.


அதே மதுரையிலிருந்து பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு( 2009இல்) தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு. க. அழகிரி. மத்திய ரசாயனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்.  பாராளுமன்றத்துக்கு சென்று சுமார் ஒன்னேககால் வருடம் கழித்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது கன்னிப்பேச்சை (த்தமிழில் அல்ல) ஆங்கிலத்தில் எழுதிப்படித்திருக்கிறார்.  தமிழுக்காக போராட்டம் நடத்தி தமிழே மூச்சு என்று வாழ்ந்திருக்கும் திமுக உறுப்பினருக்கு இந்த கதியாவென நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

எட்டாம் அட்டவணையில் தற்சமயம் 22 மொழிகள் அங்கீரிக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசால். ஆனாலும் மந்திரியாக இருப்பவர்கள் பாராளு மன்றத்தில்பேசவேண்டும் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச அனுமதிக்கப்படுவார்களாம்.

இந்தி தெரிந்த தயா நிதி மாறன் போன்றவர்களுக்கு இந்தப்பிரச்னையெல்லாம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 9 மொழிகளில் பேசிக்கொள்ளலாம் அனைத்து மொழிகளிலும் கேட்கும் "மொழிமாற்ற வசதியோடு"

இன்றைக்கு இருக்கிற நவீன தொழில் நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் இந்த வசதி செய்தது தர முடியும் என்கிறார்  சீதாராம் எச்சூரி எம்.பி.

கோவையில் உலகச்செம்மொழித்தமிழ்  நாடு மாநாடு ( மானாட மயிலாட போலல்ல) நடந்து முடிந்திருக்கிறது. தலைக்குடிமகள் பிரதீபா வந்து சென்றிருக்கிறார்.  அதே நேரத்தில்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட போராடிக்கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் பேசுவதற்கான ஏற்பாடு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் வாய்ப்பு வாய்க்கப்பெறும் நாள் எந்த நாளோ.

"கூட்டத்தில் கூடி நின்று
கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி
நாளில் மறப்பாரடி"

என்னும் பாரதியின் வரிகள் மெய்ப்படக்கூடாது

1 comment:

அழகிய நாட்கள் said...

மதங்கள் என்று சொன்னாலே தில்லுமுல்லுகள் கொண்டதுதான்.
நீங்கள் குறிப்பிட்ட மதம் என்பது உலகிலேயே பெரியது மட்டுமல்ல அதிக உயிர்வதைகளை ஈராக் போன்ற நாடுகளில் செய்வதற்கு காரணமாக இருந்தது. பிறந்த குழந்தைக்கு மத வழிபாடுகளை அந்தக்குழந்தைகள் விபரம் தெரியாமல் இருக்கும்போதே போதிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் கடுமையாக சுத்திகரிப்பு செய்து பார்க்க வேண்டும்.