வலைப்பதிவில் தேட...

Friday, April 30, 2010

உழைப்பவர் தினம்

உலகத்தொழிலாளருக்கெல்லாம் 
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர கலாசார வாழ்க்கை
எட்டு மணி நேர உறக்கம்

அன்று
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம் 
இன்று ஏ சி அறைகளுக்குள்
அடைபட்டுக்கிடக்கும் 
ஐ டி இளைஞர்களுக்கும
சேர்த்துதான்

மீண்டும்
அதே கோரிக்கையை
அவர்களின் தியாகங்கள்
பேரால் உறுதி ஏற்க
வேண்டிய தருணம்
எனப்படுகிறது  

3 comments:

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

எண்ணங்கள் 13189034291840215795 said...

.குரு ரவிதாஸ், ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்டாலின் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.

அருமை திலீப்..

வாழ்த்துகளும்..

தம் பிறப்பில் பெருமைப்படுவது உங்களை உயர்த்துகின்றது...

அழகிய நாட்கள் said...

எனது வலைப்பதிவைப்படித்து கருத்து சொன்ன பனித்துளி சங்கர் மற்றும் புன்னகை தேசம் இருவருக்கும் எனது நன்றிகள்..
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் என்பார் பாரதி.
இந்த தேசத்தில்
எனது தாய் கர்ப்பத்தில் அள்ளித்தின்ற மண்ணைத்தவிர வேறெந்த மண்
எங்களது மண் என்பார்
ஆதவன் தீட்சண்யா..
நான்கில் ஒரு பகுதி மக்களை அவரது பிறப்பால் கூனிக் குறுகி கூசிடச்செய்யும் ஒரு அமைப்பு நமது. அதுதான் நான் எனது பிறப்பை உரக்கசொன்னதற்கான காரணம்.